இந்தியா உலகம்

கனடாவில் இருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்த 4 இந்தியர்கள் கடும் பனியால் விறைத்து மரணம்.!

Summary:

கனடாவில் இருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்த 4 இந்தியர்கள் கடும் பனியால் விறைத்து மரணம்.!

அமெரிக்காவின் வடக்கு எல்லையில் உள்ள மாகாணங்கள் மற்றும் கனடா நாடு கடுமையான பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் எமர்சன் எல்லைப்பகுதியில், வாகனத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேரின் சடலத்தை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மனிடோபா மாகாணத்தில் இருந்து அமெரிக்காவிற்கும் அவர்கள் நுழைய முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2 பெரியவர்கள், 1 நடுத்தர வயதுள்ளவர் மற்றும் 1 குழந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

எல்லைப்பகுதியை எளிதாக கடந்துவிடலாம் என எண்ணி அவர்கள் புறப்பட்டு இருக்கலாம் என்றும், ஆனால் -35 டிகிரி செல்ஸியஸ் குளிர் நிலவுவதால் அனைவரும் குளிரில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவின் இந்திய தூதர்கள் விளக்கம் அளிக்கவும் மத்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


Advertisement