ச்ச்சீ... என்ன கருமம்... ஃப்ளைட்ல குடிச்சிட்டு தாய் மற்றும் சிறுமிக்கு பாலியல் சீண்டல்.! 2 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு.?16-year-old-girl-and-her-mom-molested-in-flight-from-us

டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் 16 வயது சிறுமி மற்றும் அவரது தாய்  பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விமான நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்ட ஈடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கில் இருந்து கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதேன்ஸ் விமான நிலையத்திற்கு சென்ற டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில்  பயணம் செய்த பயணி ஒருவர் மது போதையில் 16 வயது சிறுமி மற்றும் அவரது தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

worldஇது தொடர்பாக அந்த தாய் மற்றும் சிறுமி  விமான பணிப்பெண்கள் இடம் புகார் அளித்தும் அவர்கள் இருவரையும் பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கின்றனர் விமான பணிப்பெண்கள். மேலும் மது போதையில் இருந்த நபருக்கு  அளவுக்கு அதிகமாக மது வழங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

worldஇதனைத் தொடர்ந்து அந்தப் பெண்  விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகளுக்கு நஷ்ட ஈடாக 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என டெல்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.