உலகம் லைப் ஸ்டைல்

13 வயசு பொண்ணு, 10 வயசு பையன்..! கர்ப்பம் ஆகி குழந்தையும் பிறந்திருச்சு..! ஆனாலும் இன்னும் நீடிக்கும் மர்மம்.!

Summary:

13 years old girl deliver girl baby in Russia

தனது கர்ப்பத்திற்கு காரணம் தனது 10 வயது தோழன் இவான்தான் என கூறிய 13 வயது சிறுமிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்தவர் 13 வயது சிறுமி டார்யா சட்னிஷ்கோவா. பள்ளியில் படித்துவரும் இவருக்கு இவான் என்ற நண்பர் உள்ளார். இவானின் வயது 10. இந்நிலையில் இவான் தன்னை கற்பழித்துவிட்டதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் டார்யா சட்னிஷ்கோவா கூற அந்த தகவல் தீயாக பரவியது.

உடனே டார்யா சட்னிஷ்கோவா மற்றும் அவரது 10 வயது காதலன் இவான் இருவரையும் வரவைத்து அந்நாட்டை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. பேட்டிக்கு பிறகு இருவரும் உலகளவில் பிரபலமானார்கள். அதேநேரம் 10 வயது சிறுவன் எப்படி ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும் என மருத்துவர்கள் இவானை சோதனை செய்ததில், அவன் இன்னும் குழந்தைதான், அவனால் ஒரு குழந்தைக்கு தற்போது தந்தையாக முடியாது என தெரிவித்தனர்.

உடனே பிளேட்டை மத்திய டார்யா சட்னிஷ்கோவா, தன்னை பலாத்காரம் செய்தது 16 வயது சிறுவன்தான், அதை வெளியே சொல்ல கஷ்டமா இருந்தது,  அதனால் தான் இவான் பேரை சொன்னதாக கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்த விவகாரம் இப்படியே சென்றுகொண்டிருந்தநிலையில் தற்போது  டார்யா சட்னிஷ்கோவாவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. உண்மையில் குழந்தைக்கு யார் அப்பா, அந்த சிறுவனா? அல்லது வேறு யாரெனுமா என கண்டறிய DNA சோதனை நடத்தப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement