ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
மனதை ரணமாக்கும் காட்சி! சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய குழந்தை! முதுகில் மற்றொரு பிள்ளை! பதறிப்போய் தாய் கரடி செய்த செயல்! வைரலாகும் வீடியோ...
வனவிலங்குகளின் உண்மையான அன்பும் பாதுகாப்பும் மனிதர்களை போலவே மிகுந்தது என்பதை காட்டும் ஒரு மனதை உருக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. தாய் கரடி தனது காயமடைந்த குட்டியை உயிர் பிழைக்க போராடிய விதம், சமூக ஊடகங்களில் பரவி அனைவரின் இதயத்தையும் உருக்கியுள்ளது.
சாலை விபத்தில் குட்டி காயம்
ஷாஹ்தோல் மாவட்டம் கோபாரு–ஜெய்த்பூர் சாலையில், வாகனம் மோதியதில் ஒரு கரடி குட்டி கடுமையாக காயமடைந்தது. அதிர்ச்சியில் தாய் கரடி, காயமடைந்த குட்டியை முதுகில் சுமந்து சாலையோரத்திற்கு நகர்த்தியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கண்ணீர் விட்டு உணர்ச்சி வசப்பட்டனர்.
தாய் கரடியின் போராட்டம்
சம்பவத்தின் பின்னர், தாய் கரடி ஒரு மணி நேரம் தனது குட்டியருகே இருந்து காப்பாற்ற முயன்றது. இன்னொரு குட்டி முதுகில் ஒட்டிக்கொண்டிருந்தபோதும், காயமடைந்த குட்டியை வாகன ஆபத்திலிருந்து காப்பாற்ற சாலையோரத்திற்கு இழுத்துச் சென்றது. ஆனால் காயத்தின் தீவிரத்தால் குட்டி உயிரிழந்தது.
இதையும் படிங்க: வெடித்து சிதறிய எரிமலையின் நடுவே காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்! ஒரே ரொமான்ஸ் தான்! தீயாய் வைரல்..!!!
வனத்துறை நடவடிக்கை
பின்னர், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, தாய் கரடியையும் உயிர் பிழைத்த குட்டியையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம், வனப்பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது வேகத்தை குறைத்து, வனவிலங்குகள் பாதுகாப்பாகச் செல்லும் அவசியத்தை நினைவூட்டியுள்ளது.
நெட்டிசன்கள், “வனவிலங்குகளும் தங்கள் குட்டிகளுக்கு மனிதர்களைப் போலவே அன்பு செலுத்துகின்றன” எனக் கூறி, வனப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.