55 ஆண்டுகளாக இணைபிரியா தோழிகளாக வாழும் யானைகள்! இந்த விஷயத்துக்கு கூட சேர்ந்து தான் வருவாங்கலாம்! ஐஏஎஸ் அதிகாரியின் வீடியோ வைரல்...



inseparable-elephant-friendship-55-years

மனிதர்களைப் போலவே விலங்குகளும் உணர்வுகள் மற்றும் உறவுகளைப் பேணும் திறன் கொண்டவை என்பதை நிரூபிக்கும் வகையில், இரண்டு யானைகளின் உணர்ச்சிபூர்வமான நட்பு காணொளியாக வெளியாகி அனைவரையும் உணர்ச்சிப்படையச் செய்துள்ளது.

55 ஆண்டுகளாக இணைபிரியா தோழிகள்

ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் ஒரு அபூர்வமான காணொளியைப் பகிர்ந்துள்ளார். அதில், 75 வயதான பாமா மற்றும் 65 வயதான காமாட்சி என்ற இரண்டு யானைகள் கடந்த 55 ஆண்டுகளாக தோழிகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வருகின்றன.

ஒன்றிணைந்து நடக்கும் வாழ்க்கை

இந்த இரண்டு யானைகள் ஒன்றாகச் சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, சஞ்சரிப்பது என அனைத்திலும் ஒரேபோல் இருப்பதை அந்தக் காணொளி வெளிப்படுத்துகிறது. இனிமையான நட்பு காட்டும் இந்த யானைகள், கரும்பு வாங்குவதற்கே கூட சேர்ந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Video : ரயில் வேகமாக வரும்போது தீடிரென தண்டவாளத்தில் விழுந்த நபர்! விழுந்தவரின் உயிரை காப்பாற்ற துணிந்த வீரர்! இறுதியில் என்ன நடந்தது? சிசி டிவி காட்சி இதோ...

யானைகளின் நினைவுத்திறன் மற்றும் உணர்வு

யானைகள் நினைவாற்றலில் மிகுந்தவை என்றும், 1000 கிலோமீட்டர் வரை தங்கள் வழிகளை நினைவில் வைத்திருக்கக்கூடியவையெனவும் கூறப்படுகிறது. மேலும், 200 கி.மீ தூரத்திலிருந்தே மோப்பம் பிடிக்கக்கூடிய திறன் கொண்டவையாகவும் இருக்கின்றன. தனக்கு சொந்தமான இனத்திலே யானை இறந்துவிட்டால், அதனை நினைத்து மனவேதனை அடைவது போன்ற உணர்வுகளும் அவற்றில் காணப்படுகிறது.

விலங்குகளிடையேயும் இவ்வாறான நெருக்கமான உறவுகள் இருக்கக்கூடும் என்பதற்கான சிறந்த உதாரணமாக பாமா மற்றும் காமாட்சியின் நட்பு விளங்குகிறது. மனிதர்களுக்கே இது ஒரு உணர்ச்சிபூர்வமான பாடமாக அமைந்துள்ளது.

 

இதையும் படிங்க: 500 ரூபாய்க்காக ஒரு டாக்டர் செய்யும் காரியமா இது? வைரலாகும் வீடியோ...