அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
தமிழக ஓட்டுனருக்கு ஆதரவாக, அதிகாரிகளை காரித்துப்பி கடிந்துகொண்ட கர்நாடக சமூக ஆர்வலர்.. லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழக எல்லையை கடந்து, கர்நாடகா செல்லும் லாரிகளிடம், அங்குள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சில நேரம் வசூல் வேட்டையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல்வேறு கருத்து முரண் நிலவினாலும், அங்குள்ள சில நல்லுள்ளம் கொண்ட நபர்கள், லாரி ஓட்டுனர்களுக்கு ஆதரவாக குரல்களை எழுப்புகின்றனர்.
இதனிடையே, சம்பவத்தன்று தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரிடம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடங்கிய காரில் இருந்த அரசுத்துறை அதிகாரிகள், ஆவணங்களை கொண்டு வா என கூறி ரூ.100 இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக தெரியவருகிறது. இதனை தூரத்தில் இருந்து கவனித்த கன்னட சமூக ஆர்வலர் ஒருவர், பணம் கொடுப்பதை வீடியோ எடுத்து வைத்தார்.
இதையும் படிங்க: தீராத வயிற்று வலியால் இளம்பெண் விபரீத முடிவு.. 20 வயதில் நேர்ந்த சோகம்.!
பணம் கொடுத்தவர் அங்கிருந்து செல்ல முற்பட, அவரையும் அழைத்துக்கொண்டவர், கர்நாடக அதிகாரிகளை நோக்கி ஆவேசமாக சீறிபாய்ந்த்து இலஞ்சம் வாங்கியதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். இதனால் வெடவெடத்துப்போன அதிகாரிகளை வீடியோ எடுத்தவர், பணத்தை மீண்டும் ஓட்டுனரிடம் கொடுக்க வைத்தார்.
மேலும், கன்னட மொழியிலேயே அதிகாரிகளை வசைபாடிய சமூக ஆர்வலர், உங்களுக்கெல்லாம் அரசு சம்பளம் கொடுக்கவில்லையா? அது உங்களுக்கு போதவில்லையா? என ஆவேசத்தில் பாய்ந்து இறுதியில் ச்சீ த்தூ என காரித் துப்பிச் சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: மாரடைப்பால் அண்ணன் - தம்பி அடுத்தடுத்து பலி.. குடும்பத்தினர் கண்ணீர் சோகம்.!