பார்க்கும்போதே மனசு பதறுது!! குழந்தையை தலைகீழாக வீதியில் தூக்கிச்செல்ல இதுதான் காரணமா?



dowry-harassment-child-abuse-rampur

லக்னோ: உத்தர பிரதேசம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சு, 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 8 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம் மற்றும் கார் கேட்டுக்கொண்டு சஞ்சு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனர்.

இந்த நிலையில், மனைவியை மிரட்டுவதற்காக சஞ்சு, 8 மாத குழந்தையை தலைகீழாக பிடித்து தூக்கியபடி வீதியில் நடந்து சென்றார். இதனை கண்ட ஊர்மக்கள் கேள்வி எழுப்பியபோது, “எனக்கு பணம் வேண்டும், இதை வீடியோ எடுத்து வை” என்று சஞ்சு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், போலீசார் சஞ்சு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தையின் இடுப்பு எலும்பு இடம்பெயர்ந்துள்ளதாக சஞ்சுவின் மனைவி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: குழந்தை பிறந்த 2 வாரத்தில்.. உறவுக்கு அழைத்த கணவன்.. மறுத்த மனைவிக்கு வினோத பழிவாங்கல்.!

 

இதையும் படிங்க: என் புருஷன் சாகல! இன்னும் கொஞ்சம் கொடுக்கவா? கள்ளகாதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவி செய்த அதிர்ச்சி செயல்! வைரலாகும் ஆடியோ!