இப்படி நடக்கும்னு யார் நினச்சது! விமானம் தலைகீழாக நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்து எரிந்து! பரிதாபமாக போன 2 உயிர்! வாகனங்கள் தீக்கரை... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
இத்தாலியின் ப்ரெஷியா நகரத்தில் பரபரப்பான நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ப்ரீசியா ஆர்.ஜி. மாடல் சிறிய ரக விமானம், கட்டுப்பாட்டை இழந்ததால், நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்தச் சம்பவத்தில், மிலானைச் சேர்ந்த வழக்கறிஞர் செர்ஜியோ ரவாக்லியா (வயது 75) மற்றும் அவரது தோழி ஆன் மரியா டி ஸ்டெஃபானோ (வயது 60) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
விமானம் விழுந்ததும் உடனடியாக தீப்பிடித்ததால், அந்தப் பகுதி முழுவதும் புகை மூடிய சூழ்நிலையில் காணப்பட்டது. நெடுஞ்சாலையில் சென்ற சில வாகனங்கள் தீக்கரையாக, இரு வாகன ஓட்டிகள் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: பாராக் க்ளைடிங் போன சுற்றுலா பயணி! கண்ணிமைக்கும் நொடியில் பள்ளத்தாக்கில் விழுந்த பயங்கரம்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ....
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. தீவிரமான இந்த விபத்து, பொதுமக்களில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றபோதே கட்டுப்பாடு இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இத்தாலி விமான பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Scary. An ultra-light ProMecc Freccia aerospace plane crashed on the A21 highway yesterday between Flero and Azzano Mella in Brescia, Italy. Two people lost their life in the crash. Vehicles on the highway had a narrow escape. pic.twitter.com/F6p7ai2udY
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) July 24, 2025