எல்லாம் இருக்கு ஆனால் அது குறைவு! 4அடியில் 4 அங்குலத்தில் 2 மாடி வீடு! கையைகூட விரிக்க முடியலங்க.... .. வைரலாகும் வீடியோ!
சமூக வலைத்தளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது, வெறும் 52 அங்குல அகலமுள்ள வீடு. மிகக் குறுகிய இடத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீடு, அதன் தனித்துவத்தாலும் வசதிகளாலும் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வைரல் வீடியோ
பிஹாரைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் ஆதித்யா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு @adityaseries01 மூலம் இந்த வீட்டின் ‘ஹோம் டூர்’ வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வெறும் இரண்டு நாட்களில் இந்த வீடியோ 1 கோடி பார்வைகளைத் தாண்டி, 1.77 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்றுள்ளது.
வீட்டின் அசத்தலான வடிவமைப்பு
வீட்டின் கதவைத் திறந்தவுடன், கைகளை முழுமையாக விரிக்க முடியாத அளவுக்கு குறுகலான இடமாக இருப்பதை காணலாம். ஆனால், அதன் உள்ளமைப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. உள்ளே நுழைந்தவுடன் சிறிய மாதா ராணி கோயில், அதற்கு அருகில் 3 அடி அகலமுள்ள படுக்கை, பின்னர் தனித்தனி அலமாரிகளுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட சமையலறை என அனைத்தும் சீர்மையான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: காதலிக்க வயசு தேவையில்லை... ரயிலில் வயதான தம்பதியினர் செய்த செயலை பாருங்க! மனதை நெகிழ வைக்கும் வீடியோ....
மேல்மாடி மற்றும் சிறப்பம்சங்கள்
வீட்டில் கழிவறை, குளியலறை இரண்டும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன. மேலே செல்ல குறுகிய படிக்கட்டு இருந்தாலும், ஒரே நேரத்தில் ஒருவரே பயன்படுத்த முடியும். வீடு 50 அடி நீளமும், 4 அடி 4 அங்குல அகலமும் கொண்டதாகும்.
பார்வையாளர்களின் எதிர்வினை
இந்த வீடியோவை கண்டவர்கள், “பார்க்கும்போதே மூச்சு முட்டுகிறது” என சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், “சொந்த வீடு என்பது பெரிய விஷயம்” என்று உணர்ச்சிபூர்வமாக மற்றவர்கள் பகிர்ந்துள்ளனர். சிலர் நகைச்சுவையாக “எல்லாம் இருக்கு, ஆனால் ஆக்ஸிஜன் குறைவு” என்றும் பதிவிட்டுள்ளனர்.
இவ்வளவு குறுகிய பரப்பளவில் அமைந்திருந்தாலும், இந்த விசித்திர வீடு இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து, சொந்த வீடு என்ற கனவு எவ்வாறு சாத்தியமாகிறது என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.
இதையும் படிங்க: எல்லார் வீட்டிலும் இப்படித்தான்.. கணவன் சொல்றதை உடனே கேட்பது போல கேட்டு! இறுதியில் மனைவி கணவனுக்கு கொடுத்த ஷாக்! வைரல் வீடியோ....