இந்தியா Vinayagar-Celebration Vinayagar-Eco Friendly

விநாயகர் சதுர்த்தி: மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் பிரபலங்கள்

Summary:

familiar faces wish ganesh chaturthi today

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முக்கிய பிரபலங்கள் நாடு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை டிவீட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

இந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளான இன்று இந்த விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி மாதம் 28 -ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை டிவீட்டர் மூலம் பகிந்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மோடி வாழ்த்துச்செய்தியை வெளியிட்டதோடு விநாயகர் படத்தையும் பகிர்ந்துள்ளார். ”விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தனது குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


   


Advertisement