பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
டிக் டாக் விளையாட்டின் உச்சக்கட்டம்!. கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞன், வைரலாகும் வீடியோ!
தற்போது ஸ்மார்ட்போன்கள் இல்லாத நபர்களே இல்லை. அதுவும் ஜியோ நெட்ஒர்க் குறைந்த கட்டணத்தில் வந்ததால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்கள் தான் பயன்படுத்துகிறார்கள். கிராமத்தில் கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட ஸ்மார்ட்போன்களை அழகாக பயன்படுத்துகிறார்கள்.
தற்போது மக்கள் அனைவரும் அதிகப்படியாக மூழ்கியிருப்பது டிக் டாக் ஆப் தான். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆப் டிக் டாக். இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுது போக்காக உள்ளது.
அடடா என்னே ஒரு டெடிகேசன் 🤔 உசிர கொடுத்து டிக்டாக் பன்னியிருக்கான்யா 😂 pic.twitter.com/MSa27mHGhk
— நைனா ✍️ (@Writer_Naina) 2 December 2018
அந்த வகையில், டிக் டாக் விளையாடிய இளைஞர் ஒருவர், பாடல் ஒன்றுக்கு ஏற்ப நடித்துள்ளார். கையில் கத்தியை வைத்துக் கொண்டு நடித்துள்ள அந்த இளைஞர், தனது நடன அசைவுகளின் போது, எதிர்பாராத விதமாக தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இந்த விபரீத வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.