லைப் ஸ்டைல் டெக்னாலஜி

கவலைய விடுங்க! வாட்ஸ் அப்பில் குரூப் காலிங் செய்வதை எளிமையாக்க புதிய வசதி அறிமுகம்!

Summary:

whatsapp added new feature to make group calling easier

சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது வாட்சப் தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு  தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள சேவைகளில் உள்ள குறைகளை பூர்த்தி செய்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுலபமாக பயன்படுத்தும் மாற்றங்களை செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் குரூப் காலிங் செய்வதில் உள்ள ஒரு சில குறைகளை சரி செய்து அடுத்த வெர்ஷனில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகிறது வாட்சப். இந்த வசதியானது ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு கடந்த மாதமே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆன்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு இந்த வசதியானது வாட்ஸ்அப்பின் வெர்ஷன் (v2.19.9) -ல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்பொழுது சோதனை முயற்சியாக வாட்ஸ்அப் பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் இந்த புதிய வசதி உபயோகத்தில் உள்ளது. மற்ற பயன்பாட்டாளர்களுக்கு விரைவில் இந்த வசதி அடங்கிய வெர்ஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அப்படி என்ன வசதி என்று எண்ணுகிறீர்களா? அடிக்கடி வாட்சப் குரூப் காலிங் செய்பவர்களுக்கு இதனைப் பற்றி நன்கு தெரியும். தற்பொழுது இருக்கும் வாட்ஸ்ஆப் வெர்ஷனில் குரூப் காலிங் செய்வதற்கு முதலில் ஒரு நபருக்கு கால் செய்ய வேண்டும். பிறகு மேலிருக்கும் add பட்டனை கிளிக் செய்து பிறகு அடுத்த நபருக்கு கால் செய்யவேண்டும். இதேபோல் எத்தனை பேருக்கு கால் செய்ய வேண்டுமோ அத்தனை முறை அந்த பட்டனை அழுத்தி அவரை குரூப் கால்லிங்கில் இணைக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவரையும் தனித்தனியாக இணைப்பது சற்று சிரமமாகவே இருந்து வருகிறது.

whatsapp shortcut large WhatsApp_GroupCall_large

இந்நிலையில் இந்த சிரமத்தினை போக்குவதற்காக வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாம் எத்தனை பேருடன் குரூப் காலிங் பேச வேண்டுமோ அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தேர்வு செய்து அனைவருக்கும் ஒரே நேரத்தில் கால் செய்ய முடியும். இதனால் ஒருமுறை நாம் கால் பட்டனை அழுத்தினால் போதும். 

இப்படி குரூப் காலிங் செய்வதற்காக வாட்ஸ் அப்பில் புதிய பட்டன் ஒன்று பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் அடையாளத்துடன் இருக்கும் அந்த கால் பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களது காண்டாக்டில் உள்ள அனைவரின் பெயர்களும் காட்டப்படும். அதில் யார் யாருக்கு குரூப் காலிங் செய்ய வேண்டுமோ அவர்களை தேர்வு செய்தபின் அங்கு காண்பிக்கப்படும் வீடியோ அல்லது வாய்ஸ் கால் பட்டனை அழுத்திய பின் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கால் அனுப்பப்படும். பிறகு அவர்கள் இணைந்தவுடன் குரூப் காலிங் துவங்கப்படும்.


Advertisement