நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா.? அப்படின்னா இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா.? அப்படின்னா இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!



this-is-very-important-if-you-have-a-cell-phone


எந்த காரணத்தை முன்னிட்டும் செல்பேசியை வலது புற காதில் வைத்து பேசக்கூடாது. போன் வந்தால், அப்படியே எடுத்துப் பேசக்கூடாது. அதுவே சைனா தயாரிப்பு போனாக இருந்தால், ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது. ஒரு மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும்போது போனில் உரையாடுவது ஆபத்தானது. ஏனென்றால் அப்போதுதான் கதிர்வீச்சு மற்றும் ரேடியேஷன் போன்றவை அதிகமாக இருக்கும்.

ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு செல்போனில் பேசுவது செவி பறையை சேதமாக்கும் என்று கூறப்படுகிறது. செல்போன் அழைப்பு வந்தால் தான் ரேடியேஷனும் அதிகமாகயிருக்கும். ரிங் ஓசையை விட வைப்ரேட் மோடில் வைத்து பயன்படுத்துவது அதிக ரேடியேஷனை உண்டாக்கும் சைலன்ட் மோடும் ஆபத்தானது தான்.

mobile

செல்பேசியை சட்டை பையில் வைப்பதை விட, பேண்ட் பாக்கெட்டில் வைத்து பயன்படுத்துவது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் செல்போனில் பேசும்போது காதின் பக்கம் சூடாகிக் கொண்டே இருந்தால், அந்த மொபைலை மீண்டும் பயன்படுத்தாமலிருப்பது நல்லது.

ஆனால் ஸ்மார்ட் போனை பொறுத்தவரையில் ரேடியேஷன் குறைப்புக்கான கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளது. குழந்தைகளிடம் கைபேசியை கொடுத்து பேச வைப்பது, அதனைப் பார்த்து ரசிப்பது இதுபோன்ற செயல்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம். அடிக்கடி மொபைலில் பேசிக் கொண்டேயிருப்பது. நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கும். அடிக்கடி தலைவலி வரும் இதுதான் அதன் அறிகுறி என்று கூறப்படுகிறது.

mobile

பெண்களை பொறுத்தவரையில் கைபேசியை தனியாக ஒரு உரையில் வைத்து கைப்பையில் வைத்துக் கொள்வது நல்லது. மாணவியர், பெண்கள் உள்ளிட்டோர்  தங்களுடைய கைபேசி எண்களை அறிமுகமில்லாத நபர்களிடம் கொடுக்க வேண்டாம். உயர்கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள் வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் உறுப்பினராகி, கல்வியையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

பெயருடன் வரும் அழைப்புகளை மட்டுமே நாம் எடுத்துப் பேசுவது நல்லது. குறிப்பாக பெண்களுக்கு நல்லது. அறிமுகமில்லாத அழைப்புகள் அல்லது தவறிய அழைப்புகளை எடுத்து பேசாமலிருப்பது மிக, மிக நன்று.