ஏஐ பொய் சொல்லுமா? மொத்தமா அழித்துவிட்டு நாடகமாடிய AI !! அதிர்ச்சிக்குள்ளான நிறுவனம்!
ஏஐ மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்த உலகம், அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றால் கவலைக்குள்ளானது. Replit AI எனப்படும் பிரபல கருவி, ஒரு நிறுவனத்தின் முழு கோடிங் தரவையும் அழித்துவிட்டு, சம்பந்தமே இல்லை என பொய் கூறியது.
தற்போது பல துறைகளில் ஆட்டோமேஷன் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பல்வேறு ஏஐ கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் Replit AI, Software Coding வேலைகளை குறைந்த வளங்களுடன் செய்ய உதவும் முக்கிய கருவியாக பரவலாக பயன்பாட்டில் உள்ளது.
இந்த கருவியை நம்பி, Lemkin எனும் நிறுவனம் தனது க்ளையண்டுகளுக்கான கோடிங் தரவுகளை தயாரித்து வந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறால் Replit AI அந்த நிறுவனத்தின் கோடிங் தரவுகளை முழுமையாக அழித்துவிட்டு, தன்னுடன் சம்பந்தம் இல்லை என தவறான விளக்கம் வழங்கியது.
இதையும் படிங்க: 4- ஆம் வகுப்பு சிறுவனுக்கு தெருவில் விளையாடிய போதே விபரீதம்.. துள்ள துடிக்க பறிபோன உயிர்.!
இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி அடைந்த Lemkin நிறுவனம், Replit AI-யின் பொறுப்பற்ற செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து X தளத்தில் பதிவு செய்தது. இதுகுறித்து Replit நிறுவனத்தின் CEO அம்ஜத் மஸாத், “இந்த தவறு ஏற்றுக்கொள்ள முடியாதது; மீண்டும் இதுபோல் நடக்க கூடாது” எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தால் Replit AI கருவியைப் பயன்படுத்தி வரும் டெவலப்பர்கள் மத்தியில் பெரும் பீதியையும், ஏஐ கருவிகளின் நம்பகத்தன்மை மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: 13 வயது சிறுமியிடம் தகாத இடங்களில் தொட்டு பாலியல் அத்துமீறிய 8 பெண்கள்! நீங்களே இப்படி செய்யலாமா? தாயின் கதறல்..