லைப் ஸ்டைல் டெக்னாலஜி

எல்லா கணக்கிற்கும் ஒரே பாஸ்வர்ட்தான் வச்சுருக்கீங்களா? ஐயோ போச்சு! உடனே படிங்க.

Summary:

Problems of using same password for all accounts

சமீபத்தில் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி இரண்டில் ஒருவர் அனைத்து கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. ஜிமெயில், பேஸ்புக், டிவிட்டர், வங்கி கணக்கு என பெரும்பாலான இணையதளங்களுக்கு நம்மில் பலரும் ஒரே பாஸ்வர்டைத்தான் பயன்படுத்துகிறோம்.

பொதுவாக பாஸ்வர்டை பொறுத்தவரை அதன் பாதுகாப்பை அதிகரிக்க சில நிபந்தனைகள் இருக்கும். ஒரு பெரிய எழுத்து, சிறிய எழுத்து, ஒரு எண், அல்லது குறியிடு என இதன் கலவையாக இருக்கும். இதனால் பலவிதமான பாஸ்வர்டை நினைவில் வைத்துக்கொள்ள சிரமப்பட்டு பெரும்பாலானோர் ஒரே பாஸ்வர்டைத்தான் அனைத்திற்கும் பயன்படுத்திக்கின்றனர்.

இதுபோன்று ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவதனால் எளிதாக நமது கணக்குகளை ஹேக் செய்துவிட முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் ஏதுனும் ஒரு அக்கவுண்டின் பாஸ்வர்டை கேக் செய்துவிட்டால் உங்கள் மத்த அக்கவுண்டுகளையும் எளிதில் கேக் செய்துவிட முடியும்.

ஒருவேளை நீங்கள் அனைத்திருக்கும் ஒரே பாஸ்வர்டை வைத்திருந்தால் உடனே அதை மாற்றுங்கள். 


Advertisement