லேப்டாப் தீப்பிடித்து வெடிக்கும் அபாயம்.. இந்த தவறை செய்யாதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!



Laptop Safety Experts Warn Against Using Laptops on Beds

லேப்டாப்பை மெத்தை, சோபாவுக்கு மேல் வைத்து பயன்படுத்துவது அதிக வெப்பம் ஏற்படுத்தி வெடிக்கும் அபாயத்தை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் பிற விஷயங்கள் காரணமாக லேப்டாபின் பயன்பாடு வெகுவாக அதிகரித்து வருகிறது. வீட்டில் இருந்து வேலை செய்யும் பலரும் தங்களது லேப்டாப்பை மெத்தை, சோபா போன்ற மென்மையான மேற்பரப்பில் வைத்தும் பயன்படுத்துகின்றனர். என்ன தான் நாம் லேப்டாப்பை சர்வீஸ் செய்து கவனமாக இருந்தாலும் அது சில சமயம் வெடிப்பதற்கு வாய்ப்புண்டு. 

மெத்தை மீது லேப்டாப் வைத்து உபயோகம் செய்கிறீர்களா?

லேப்டாப்பின் பின்புறத்தில் உள்ள வெப்பத்தை குறைக்கும் துளைகள் காரணமாக மெத்தை போன்றவற்றில் வைத்து பயன்படுத்தும் போது லேப்டாப் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மெத்தை மீது வைத்து பயன்படுத்தினாலும், டேபிள் வைத்து பயன்படுத்தினாலும் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: Warning: எலி கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?.. அலட்சியமாக இருக்காதீங்க.. உயிருக்கே உலை வைக்கும்.!

Laptop

பேட்டரி பாதிக்கும்:

லேப்டாப்பை உடனடியாக ஷட் டவுன் செய்து பைக்குள் வைத்து எங்கும் செல்லக்கூடாது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வெளியே கிளம்பும் ஐந்து நிமிடங்கள் முன்பே அதனை ஷட் டவுன் செய்து விட வேண்டும் என்றும், அடிக்கடி லேப்டாப்பை மூடியவுடன் அதனை பைக்குள் வைத்து சென்றால் பேட்டரி, ரேம், மதர்போர்டு போன்றவை பாதிக்கப்படலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர். 

தீப்பிடித்து வெடிக்க வாய்ப்பு:

பலரும் தங்களது லேப்டாப்பை ஷட் டவுன் செய்வதற்கு பதிலாக ஸ்லீப் மோடில் வைத்து பைக்குள் போட்டு அப்படியே பயணிக்கின்றனர். இதனால் அதன் செயல் திறன் பாதிக்கப்படும். தற்போது வரும் பல லேப்டாப் அதிநவீன சார்ஜிங் முறையில் செயல்படும் நிலையில், அதிக நேரம் சார்ஜ் போடுவதாலும் லேப்டாப் வெடிக்க வாய்ப்புள்ளது.