டெக்னாலஜி

வருகிறது புதிய தொழில்நுட்பம்; ஐபோன்களில் இனி அதிக பேட்டரி பேக்கப்

Summary:

ஆப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேக்களில் பேக்பிளேன் தொழில்நுட்பத்தை பொருத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழில்நுட்பம் சாதனங்களில் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்பிளேன் தொழில்நுட்பம் ஒவ்வொரு பிக்சல்களை ஆன் செய்து, ஆஃப் செய்யும் பணியை மேற்கொண்டு டிஸ்ப்ளே ரெசல்யூஷன், ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் மின்சக்தி பயன்பாடு உள்ளிட்டவற்றை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய OLED டிஸ்ப்ளேக்கள் LTPS TFT அல்லது குறைந்த வெப்பநிலை பாலிசிலிகான், மெல்லிய ஃபிலிம் டிரான்சிஸ்டர்களை பயன்படுத்துகின்றன.

oled display board க்கான பட முடிவு

எனினும் ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால சாதனங்களில் LTPO TFT அல்லது குறைந்த வெப்பநிலை பாலிக்ரிஸ்டலைன் ஆக்சைடு பயன்படுத்தலாம் என தெரிகிறது. LTPO தொழி்ல்நுட்பம் முந்தைய LTPS வகைகளை விட 5 முதல் 15% வரை மின்சக்தியை சேமிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனால் எதிர்கால ஐபோன்களின் பேட்டரியை நீட்டிக்க முடியும்.

iphone display க்கான பட முடிவு

OLED டிஸ்ப்ளேக்களில் அதிக மின் தேவையை கட்டுப்படுத்த LTPO தொழில்நுட்பத்தை ஆப்பிள் உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் வழங்க  கூடிய OLED பேனல்களை சாம்சங் நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது. சாம்சங் நிறுவனத்துடன் எல்.ஜி.யும் ஆப்பிள் நிறுவனத்திற்கு பேனல்களை வழங்கலாம் என தெரிகிறது.

அந்த வகையில் டிஸ்ப்ளேக்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் LTPO தொழில்நுட்பத்தை முதலில் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் வழங்கி, அதன் பின் ஐபோன்களுக்கு வழங்க ஆப்பிள் திட்டமிட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement