டெக்னாலஜி

விடுதியில் ஹிட்டன் கேமரா இருப்பதை கண்டறிவது எப்படி?.. பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்.!

Summary:

விடுதியில் ஹிட்டன் கேமரா இருப்பதை கண்டறிவது எப்படி?.. பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்.!

இன்றுள்ள காலத்தில் பெண்கள் பயண நிமித்தமாகவும், பணி நிமித்தமாகவும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய தேவையும், அங்குள்ள விடுதிகளில் திடீரென தங்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. 

இவ்வாறு பெண்கள் விடுதிகளில் தங்கும் நேரங்களில், அயோக்கிய எண்ணம் கொண்ட கயவர்களால் உளவு கேமரா எனப்படும் கண்களுக்கு புலப்படாத கேமராவை வைத்து, அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கொடூரம் நடந்து வருகிறது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ஊசிமுனை அளவில் இருக்கும் ரகசிய கேமராவும் இன்றளவில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறான மறைமுக கேமராக்கள் உள்ளதா? என்பதை கண்டறிய எளிய முறைகள் உள்ளது. 

முதலில் அறைக்குள் துளியளவு வெளிச்சம் வராத வகையில் கதவு, ஜன்னலை அடைத்துவிட்டு செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்ய வேண்டும். பின்னர், செல்போனில் உள்ள கேமிராவில் பிலாசை ஆப் செய்து, அறையை புகைப்படம் எடுக்க வேண்டும். 

இந்த புகைப்படத்தை கவனித்தால் ஊசிமுனை அளவுள்ள ரகசிய கேமிரா இருந்தாலும், இருட்டு புகைப்படத்தில் தனது இருப்பிடத்தை காண்பித்துவிடும். கேமரா பொருத்தப்பட்டு இருந்தால் அந்த இடங்கள் சிவப்பு நிற புள்ளிகள் போல தெரியும். 

அவ்வாறு கேமரா பொருத்தப்பட்டு இருப்பின், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட வேண்டும். இன்றளவில் காவலன் செயலிலும் செயல்பாட்டில் உள்ளது. அதனைக்கூட உபயோகம் செய்துகொள்ளலாம். முடிந்தால் ரகசிய கேமராவை கண்டறிந்து வீடியோ எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஆதாரத்திற்கு தேவைப்படும்.


Advertisement