கூகுள் பே யூஸ் பண்றீங்களா?.. ரூ.12 லட்சம் வரை கடன் பெறலாம்.. இரண்டே நிமிடம் தான்.!!



Google pay personal loan details

இன்றைய காலகட்டத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஜிபே, போன்பே என மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. யுபிஐ வங்கிப் பரிவர்த்தனையை பயன்படுத்தி கடைகளில் பொருள் வாங்குவது, ஆன்லைனில் ஆர்டர் செய்வது என மக்கள் தங்களை பழக்கிகொண்ட நிலையில், கையில் பணம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

தனிநபர் கடன்

இந்நிலையில் கூகுள்பே-வில் கிரெடிட் ஸ்கோர் வருமானம், கடன் தொகை உள்ளிட்டவற்றை பொறுத்து தகுதியுள்ள பயனர்களுக்கு ரூ.12 இலட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 21 வயதுடையோர் இதன் மூலம் கடன் பெற்று பயனடையலாம்.

இதையும் படிங்க: குளிக்க சோம்பேறிதனமா.? உங்களையும் மெஷின்ல போட்டுரலாம்.!! நவீன இயந்திரம் அறிமுகம்.!!

google pay

இரண்டு நிமிடம் தான்

டிஜிட்டல் முறையில் விரைந்து கடன் வழங்கும் இந்த செயல்முறையில் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு, பின் அந்தந்த மாதத்தவணையில் எடுத்துக் கொள்ளப்படும். தகுதியுள்ள பயனராக இருந்தால் இரண்டே நிமிடத்தில் அனைத்து வேலையும் முடிந்துவிடும்.