மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டதா.? இதை உடனடியாக பண்ணுங்க போதும்.!?

மொபைல் தண்ணீரில் விழுந்து விட்டதா.? இதை உடனடியாக பண்ணுங்க போதும்.!?



Do these things after mobile fell off in water

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க பல நவீன கருவிகள் வந்து விட்டன. இதில் குறிப்பாக மொபைல் என்பது பலரது வாழ்விலும் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கையில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை. இவ்வாறு மனித வாழ்வில் முக்கியமான ஒரு பொருளாக மாறிவிட்ட மொபைல் தண்ணீரில் விழுந்துவிட்டால் உடனடியாக என்ன செய்யலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

mobile

1. போன் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனடியாக ஸ்விட்ச் ஆஃப் செய்து விட வேண்டும். ஸ்விட்ச் ஆஃப் ஆன மொபைலை உடனடியாக ஆன் செய்யக்கூடாது. இவ்வாறு செய்வதால் மொபைலில் உள்ள மதர் போர்டு பாதிக்கப்படும்.

2. தண்ணீரில் விழுந்த மொபைலை ஆஃப் செய்து ஒரு சிலர் சார்ஜ் போடுவார்கள். ஆனால் இவ்வாறு செய்வதால் மொபைல்  அதிகமாக பழுதடையும்.
3. தண்ணீரில் விழுந்த போனை வெயிலில் காய வைக்கக் கூடாது. இது பேட்டரியை பழுதடைய செய்து போன் வெடிப்பதற்கு காரணமாக இருக்கும்.
4. தண்ணீரில் விழுந்த போனின் பேட்டரியை உடனடியாக கழட்டி விட வேண்டும்.
5. குறிப்பாக தண்ணீரில் விழுந்த போனை அரிசி மாவில் வைத்தால் தண்ணீரைஉறிந்து விடும் என்று பலர் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதில் உண்மை இல்லை.
6. மேலும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அந்த அளவிற்கு வேகமாக சர்வீஸ் சென்டர் சென்று மொபைலை பழுது பார்ப்பது தான் சரியான விஷயமாக கருதப்படுகிறது.
7. தண்ணீரில் விழுந்த போனை காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்து மற்றொரு ஈரம் இல்லாத துணியை வைத்து நன்றாக காற்று புகாத அளவிற்கு இறுக்கமாக மூடி வைத்துவிட வேண்டும்.

mobile

8. முன்னதாகவே மொபைல் போனில் உள்ள சிம்கார்டு, மெமரி கார்டு போன்றவற்றை கழட்டி விட வேண்டும். இது போன்ற ஒரு சில செயல்முறைகளின் மூலம் தண்ணீரில் விழுந்த போனை எளிதாக சரி செய்யலாம்.