இந்தியா

அச்சு அசல் கார் மாதிரியே இருக்கே.! வேற லெவல் பைக்.! வைரல் வீடியோ.!

Summary:

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக சில கண்டுபிடிப்புகள் சமூக வலைதளங்களின் வழியாக வெளியாக

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக சில கண்டுபிடிப்புகள் சமூக வலைதளங்களின் வழியாக வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். தற்போது இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இந்தநிலையில் இமாச்சல பிரதேசதில் காரை போலவே பைக் ஒன்று பதிவு செய்யப்பட்டு சாலையில் ஓடுகிறது.

அதில் ஒரு நபர் அமர்ந்து கார் ஓட்டுவது போலவே ஓட்டிச்செல்கிறார். அந்த பைக் அப்படியே அச்சு அசலாக கார் போலவே உள்ளது. காருக்கு போலவே கதவுகளும் உள்ளது.  தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் அந்த நபர் பைக்கை கார் போலவே ஓட்டிச்செல்கிறார்.

இருசக்கர வாகனத்தை கார் போலவே வடிவமைத்துள்ளனர். மழை, வெயில் காலங்களில் அந்த பைக்கை ஓட்டுபவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அந்த அளவிற்க்கு வடிவமைத்துள்ளனர். தற்போது அந்த பைக் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement