#MeToo: பாலியல் புகாரால் 48 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள் நிறுவனம்!
#MeToo என்ற ஹாஸ் டாக் இன்று மிகவும் பிரபலமாகி வருகின்றது. பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை குறித்து #MeToo என்ற ஹாஸ் டாக் மூலம் சமூக வலைதளத்தின் பகிர்ந்து வருகின்றனர். இதில் சினிமா, அரசியல், விளையாட்டு என அணைத்து துறையை சேர்ந்த பலர் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பல பொதுப்பணி துறைகளில் மட்டுமல்லாமல் தனியார் ஐடி நிறுவனங்களிலும் இதை போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால் அதனைப்பற்றி அந்த நிறுவனங்கள் வெளியில் சொல்லாமல் நடவடிக்கைகளை எடுத்திருப்பது இப்போது தெரிய வருகிறது. இதில் முக்கியமாக கூகுள் நிறுவனம் மற்றும் இந்த பாலியல் புகாரால் 48 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதில் 13 உயர் அதிகாரிகளும் அடங்குவர்.
இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் ஒன்று, ஆண்ட்ராய்டின் தந்தை என அறியப்படும் ஆண்டி ரூபினுக்கு, கடந்த 2014ல் 90 மில்லயன் டாலர்களை கொடுத்து பாராட்டி, வெளியே அனுப்பிய கூகுள் நிறுவனம், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறைத்ததாக செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, ‘கடந்த 2 ஆண்டில், பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் 13 சீனியர் ஊழியர்கள் உட்பட 48 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் செட்டில் மெண்ட் தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை. சமீபகாலமாக பல விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தவறுதலான நடத்தைக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’ என குறிப்பிட்டுள்ளார்.