மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
#Breaking: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி -மருத்துவமனையில் அனுமதி.!

தமிழகத்தில் உள்ள பல யூடியூப் சேனல்களில், அரசியல் ரீதியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து பிரபலமடைந்த நபர் சவுக்கு சங்கர். இவர் முன்னாள் அரசுப் பணியாளர் ஆவார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி,மத்திய-மாநில அரசுகளின் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தவர், தற்போது பல்வேறு வழக்குகளால் தொடர்ந்து சிறைவாசம், ஜாமின் போராட்டம், விடுதலை என இருந்து வருகிறார்.
திடீர் நெஞ்சுவலி
சமீபத்தில் அவர் ஜாமினில் வெளியே வந்து இருக்கும் நிலையில், சென்னையில் இருந்த அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கால் மிதியடியில் அமைச்சர் உதயநிதியின் முகம்; தன்னை இழிவுபடுத்தியோருக்கு சாட்டையடி பதில்...!
இதனால் அவர் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடபழனியில் இருக்கும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: #Breaking: "ஆடம்பர பிரத்தியேக நாற்காலி" - நா.த.க நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்.! அடுத்த அதிர்ச்சி.!