தமிழகம்

நான் என்ன பிரைம் மினிஸ்டரா.? யூ டியூபர் பப்ஜி மதன் ஷாக் கேள்வி.! நச்சுன்னு பதிலளித்த போலீசார்.!

Summary:

தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டைச் சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையச் ச

தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டைச் சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையச் சேவை மூலம் பயன்படுத்தி சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசியதாக பப்ஜி மதன்மீது புகார்கள் எழுந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனைத் தேடிவந்தனர். குற்றம்சாட்டப்பட்ட யூ டியூபர் பப்ஜி மதன் தலைமறைவாகிய நிலையில், அவரது மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

யூ டியூபர் பப்ஜி மதனின் யூ டியூப் சேனலுக்கு, அவரது மனைவி கிருத்திகா தான் அட்மின் எனக் கூறப்படுகிறது. மதனுக்கு யூ-டியூப் மூலம் மட்டும் மாதம் தோறும் 7 லட்ச ரூபாய் வருமானம் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் போலீசார் மதன்குமாரை நேற்று 18.06.2021 ஆம் தேதி காலை கைது செய்தனர்.

பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்… – Update News  360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update  News

மதன்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதன்குமாரை கைது செய்த போலீசார் அவரை சென்னை மாநகர ஆணையத்திற்கு அழைத்து வந்தபோது பத்திரிகையாளர்கள், அவரை புகைப்படம் எடுத்தனர். அப்போது, ''நான் என்ன பிரைம் மினிஸ்டரா?'' என மதன் கேட்டுள்ளார். அப்போது உடனிருந்த போலீசார்  'நீ அக்யூஸ்ட் தான் வா.... என கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 


Advertisement