தமிழகம்

செக்ஸ் சாட்டில் சிக்கிய யூடியூப் பிரபலம் மதன் கௌரி! வெளியான புகைப்படங்கள் உண்மையானவையா?

Summary:

youtube famous madan gowri leaked sex chats

மதுரையைச் சேர்ந்த மதன் கௌரி என்பவர் சில நாட்களாகவே யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி வருகிறார். யூடியூப் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இவரை பற்றி நன்றாக தெரிந்திருக்கும். 25 வகையான மதன் கௌரி சமூகத்தில் நடைபெறும் பல்வேறு சமூக சீர்கேடுகளை பற்றி அலசி ஆராயக்கூடிய திறன் கொண்டவர்.

வெறும் மொபைல் போனை வைத்துக்கொண்டு அனைத்துத் துறைகளை பற்றி பேசும் வல்லமை கொண்ட மதன் கௌரிக்கு யூடியூபில் மட்டுமே 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் வீடியோக்கள் அவர்களால் பெரிது பார்க்கப்பட்டு வருகிறது. தன்னுடைய பேச்சால் இவர் அனைவரையும் கவர்ந்து ஈர்த்துள்ளார்.

இப்படி யூடியூப் மூலம் பிரபலமடைந்து வரும் மதன் கௌரி தற்போது மிகப் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவை அனைத்தும் உண்மையா இல்லையா என்பதை தன் ரசிகர்களுக்கு நிரூபிக்கும் ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் மதன் கௌரி.

மதன் கெளரி ஒரு பெண்ணுடன் பிரைவேட் சாட்டில், செக்ஸ் சாட் செய்யும் விதமான சில ஸ்கிரின் சாட்களும், அவர் வெப் கேமரா முன்பு அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சாட்டில் அந்த பெண் வேண்டாம் என்று மறுக்கும் பட்சத்திலும் கூட அவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை தொல்லை செய்து கொண்டே இருப்பது போன்ற உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியினை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் மிகவும் கொந்தளிப்பில் உள்ளனர். வாய்கிழிய பேசும் மதன் கௌரி உண்மையில் இப்படிப்பட்டவரா என வசைபாடும் அளவிற்கு இந்த விவகாரம் தற்பொழுது தலைதூக்கியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் தான் எப்படிப்பட்டவர் என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இப்போது இருந்து வருகிறார் மதன் கௌரி.

மேலும் இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவுகள், உண்மையில் மதன் கௌரி அப்படிப்பட்டவர் கிடையாது. அவருடைய வளர்ச்சியைப் பிடிக்காத ஒரு சில விஷமிகளால் இந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து மதன் கௌரி இதுவரை எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

 


Advertisement