ஓடும் ரயிலில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்கள்.. சுற்றி வளைத்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!youths-threatened-with-gun-on-moving-train-a-shock-awai

கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்கான பாலக்காடு -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. இதில் முன் பதிவில்லாத பெட்டியில் மலப்புரத்தை சேர்ந்த அமீன் ஷெரிப், கண்ணூரை சேர்ந்த அப்துல் ரஷீத், பாலக்காட்டை சேர்ந்த ஜப்பல்ஷா மற்றும் காசர்கோட்டையை சேர்ந்த முகமது ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ரயிலில் யணம் செய்த அந்த 4 இளைஞர்களுள் ஒருவர் தன் பையில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்ததாகவும் பின்பு அந்த துப்பாக்கியை வைத்து அவர்கள் சுடுவது போலவும், மிரட்டுவது போலவும் மாறி மாறி செய்து கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Youths threatened

இந்நிலையில் இதனை சற்றும் எதிர்பாராத சகப் பயணிகள் அச்சமுற்று ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில்வே துறை பாதுகாப்பு படையினர் கொடை ரோடு ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். மேலும் பாலக்காடு -திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் கொடைரோடு ரயில் நிலையத்தை அடைந்தபோது ரயில்வே பாதுகாப்பு படையினர் முன்பதிவில்லா பெட்டியை சுற்றி வளைத்து இளைஞர்களை கைது செய்தனர்.

 இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞர்களை விசாரித்த ரயில்வே காவல் படையினருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தாங்கள் வைத்திருந்தது விளையாட்டு துப்பாக்கி என்று தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன ரயில்வே அதிகாரிகள் அந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.