12 ஆம் வகுப்பு மாணவியின் வீட்டில் புகுந்து அத்து மீறிய இளைஞர்.. போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

12 ஆம் வகுப்பு மாணவியின் வீட்டில் புகுந்து அத்து மீறிய இளைஞர்.. போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!


youth-arrested-under-pocso-act-for-sexually-harassing-p

வீடு புகுந்து 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் கிராமத்தை சேர்ந்தவர் திலீப். இவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சென்ற 12 வகுப்பு மாணவியை தினமும் கேலிசெய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த மாணவி ஆத்திரமடைந்து இத்தகவலை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியின் தாய் திலீபனை தட்டிக் கேட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த திலீபன் நேற்று முன்தினம் மாணவியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து, மாணவி தனியாக இருந்தபோது அவரது வீட்டில் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல்துறையினர் திலீப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது