தமிழகம்

துணியில் சுற்றப்பட்ட நிலையில் சிரித்த முகத்துடன் அனாதையாக கிடந்த குழந்தை.! இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர்களின் அதிரடி நடவடிக்கை.!!

Summary:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள கறம்பக்குடி தாலுகா, பிலாவிடுதி பேருந்து நிறுத்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்து உள்ள கறம்பக்குடி தாலுகா, பிலாவிடுதி பேருந்து நிறுத்தத்தில் பிறந்து சிலமணி நேரமே ஆன பெண்குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்ட நிலையில், அப்பகுதி இளைஞர்களால் கண்டெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி பேருந்து நிறுத்தத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று துணி பையில் சுற்றப்பட்டநிலையில் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி கிராம இளைஞர்கள் உடனடியாக அக்குழந்தையை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தையின் தாய்,தந்தை பற்றிய தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களால் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் குழந்தையை கறம்பக்குடி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவர் செந்தில்குமார் ஆலோசனைப்படி, குழந்தையை இன்குபேட்டர் மூலம் பாதுகாத்து, தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் வட்டாட்சியர் விஸ்வநாதன் அவர்கள் மற்றும் துணை வட்டாட்சியர் ராமசாமி அவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பார்வையிட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, குழந்தைகள் பாதுகாப்பு வாகனத்தின் மூலம் அக்குழந்தை எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் வட்டாட்சியர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் குழந்தையைப் பெற்றெடுப்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனாலும் இந்த சூழ்நிலையில் அழகான குழந்தையை பரிதாபமாக விட்டுச்சென்ற நயவஞ்சகர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement