தமிழகம்

பட்டப்பகலில் போலீசாரை உருட்டுக்கட்டையால் தாக்கிய வாலிபர்கள்.! வெளியான அதிர்ச்சி வீடியோ.!

Summary:

திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர்கள் போலீசாரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர்கள் போலீசாரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விருவீடு சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒருகட்டத்தில் அந்த வாலிபர்களை கட்டுப்படுத்த காவலர் ஒருவர் லத்தியை எடுக்க செல்கிறார். இதனை பார்த்த அந்த வாலிபர்கள் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து போலீசாரை சரமாரியாக தாக்குகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக காவலர்களுக்கும் முக்கிய பங்கு என்றே கூறலாம். தடுப்பு பணியில் ஈடுபட்ட பல காவலர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தங்கள் உயிரை பணயம் வைத்து சுட்டெரிக்கும் வெயில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறையினர். 

இந்தநிலையில், காவலர்களின் பணியை செய்யவிடாமல் சிலர் செய்யும் செயல் காவலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர்கள் போலீசாரை தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement