தமிழகம் காதல் – உறவுகள்

தனியாக இருந்த காதலி.! வீட்டிற்குள் துழைந்து இளைஞன் செய்த காரியத்தால் துடிதுடித்து நேர்ந்த துயரம்!!

Summary:

youngman killed his lover forblocking mobile mumber

விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி. இவர் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திலகவதி. இவர்  தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், திலகவதி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த திலகவதி தன் தாய்மாமன் மகேந்திரனுக்குப் போன் செய்த நிலையில்,அவர் அங்கு விரைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த திலகவதியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரைப் பிடித்து விசாரித்துள்ளனர். 

அப்பொழுது  திலகவதியும், இளைஞர் ஆகாஷும் காதலித்தது தெரியவந்தது. மேலும் மேலும் கடந்த சில நாட்களாக  கிரிக்கெட் விளையாடச் சென்ற ஆகாஷ், திலகவதியிடம் செல்போனில் பேசுவரை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திலகவதி, ஆகாஷ் செல்போன் நம்பரை பிளாக் லிஸ்ட்டில் போட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ஆகாஷ் திலகவதி வீட்டுக்கு சென்று வீட்டில் தனியாக இருந்த திலகவதியிடம், சண்டை போட்டுள்ளார். பின்னர்  ஆத்திரமடைந்த ஆகாஷ் கத்தியால் திலகவதியின் வயிற்றில் குத்திவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் ஆகாஷை கைது செய்துள்ளனர்.
 


Advertisement