தமிழகம் காதல் – உறவுகள்

டிக் டாக்கால் மலர்ந்த காதல்.! திருமணம் பேச காதலி வீட்டிற்கு சென்ற இளைஞருக்கு காத்திருந்த பேரிடி!!

Summary:

youngman commit suicide to cheating lover

பாளையங்கோட்டை இலங்கைகுளம் பகுதியில் வசித்து வருபவர் மரிய புஷ்பராஜ். 22 வயது நிறைந்த இவர் டிக் டாக் செயலி பெருமளவில் பயன்படுத்தியுள்ளார், மேலும் ஏராளமான டிக்டாக் வீடியோக்கள் செய்துள்ளார். 

இந்நிலையில் மரியபுஸ்பராஜ்க்கு அவரைப் போலவே டிக்டாக் செயலியில் எப்போதும் பிஸியாக இருக்கும் திருமங்கலத்தை சேர்ந்த சங்கீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர் மேலும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் சங்கீதா கர்ப்பம் அடைந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மரியபுஷ்பராஜை கட்டாயப்படுத்தியுள்ளார். 

மரியபுஷ்பராஜ் க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து புஷ்பராஜ் தனது குடும்பத்தினருடன் சங்கீதா வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அவருக்கு குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த உண்மை தெரிந்ததும் மனமடைந்த மரிய புஷ்பராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில்,அவர் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

தொடர்புடைய படம்

இச்சம்பவம் குறித்து விவரமறிந்த சங்கீதா மரிய புஷ்பராஜை சந்திக்க  நேற்று மதுரைக்கு வந்தபோது அவரும் விஷம் குடித்து பேருந்து நிலையத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.  இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement