த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
மாமனாரால் பாலியல் தொல்லை; தாய்க்கு ஆதரவாக நீதி கேட்ட மகள்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!
கணவர் இறந்ததால் மாமனாரின் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக இளம் பெண் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் T.குமாரபுரம் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு தனது குழந்தைகளுடன் வந்திருந்தார். அப்போது அவர் தனது கணவர் கார்த்திகேயன் ஆறு மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் உயிரிழந்ததாகவும் தற்போது வாழ்வாதாரம் எதுவும் இல்லாமல் உணவுக்காகவும் வாழ்க்கைக்காகவும் போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தனது கணவர் கார்த்திகேயனின் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருவதாக புகாரளித்தார். இது குறித்து அவர் மீது நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.
மேலும் பாலியல் புகாருக்கு என்ன ஆதாரம் என்று என்னைக் கேட்கிறார்கள், இதனால் அவமானத்தில் கூனிக்குறுகி உள்ளேன் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். பாலியல் புகாருக்கு என்ன ஆதாரம் தருவது என்று தெரியவில்லை அவர் பேசிய ஆடியோக்கள் என்னிடம் இருக்கிறது என மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கூட்டத்துக்கு வந்த அவரது மகள் தனது தந்தை இறந்த பிறகு தனது தாத்தா தொடர்ந்து தாய்க்கு பல்வேறு விதமாக பாலியல் தொந்தரவு செய்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது, எனவே எனது தாய்க்கு பாதுகாப்பு தாருங்கள் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.