தமிழகம்

ஊர் சுற்றிய மனைவியை கண்டித்த கணவன்; பூச்சி மருந்து குடித்த இளம் பெண் திருமணமான ஒன்றரை வருடத்தில் நடந்த சோகம்...!

Summary:

ஊர் சுற்றிய மனைவியை கண்டித்த கணவன்; பூச்சி மருந்து குடித்த இளம் பெண் திருமணமான ஒன்றரை வருடத்தில் நடந்த சோகம்...!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆலத்துடையான் பட்டி சின்ன கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் இவர். திருச்சியில் உள்ள உணவகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் கலையரசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சரத்குமார் திருச்சியில் தங்கி வேலை செய்வதால் வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி கலையரசி கோவிலுக்கு செல்வதாக கூறி அடிக்கடி வெளியே சென்று சுற்றிவிட்டு வந்துள்ளார். 

இதனை அறிந்த சரத்குமார் கலையரசிக்கு போன் செய்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கலையரசி நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் கலையரசி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து முசிறி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.


Advertisement