மன உளைச்சலால் புதுப்பெண் தூக்கிட்டு சாவு,.. பெரம்பூர் அருகே சோகம்..!

மன உளைச்சலால் புதுப்பெண் தூக்கிட்டு சாவு,.. பெரம்பூர் அருகே சோகம்..!


young-woman-commits-suicide-by-hanging-in-chennai

சென்னை பெரம்பூரில் உள்ள கொடுங்கையூர் எழில் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (25). இவர் ஒரு இன்ஜினியர் திருமுடிவாக்கத்தில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். சிரஞ்சீவிக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் காவியாவுக்கும் (19) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந் நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த காவியா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்ததும் கணவர் சிரஞ்சிவி அதிர்ச்சி அடைந்தார். உடனே காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் காவல்துறையினர் சென்று விசாரணை செய்ததில் காவியாவிற்கு இரண்டு முறை கருகலைப்பு ஆனதால் காவியா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிந்து தெரியவந்துள்ளது.

இதனிடையே காவியாவின் தந்தை ரவி கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். எனது மகளுக்கு திருமணமாகி 17 மாதம்தான் ஆகிறது எனவும் மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி ஒன்றரை வருடம் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.