நடுரோட்டில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற காதலன்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!

நடுரோட்டில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற காதலன்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!


Young man try to kidnap school girl in Chennai

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி இந்து. இவர் புரசைவாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இதனிடையே ஓட்டேரி பகுதியை சேர்ந்த 20 வயதான அபினேஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவர மாணவியை கடுமையாக கண்டித்துள்ளனர்.

chennai

இதனால் மாணவி கடந்த ஒன்றரை மாத காலமாக காதலனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து தனது தோழிகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போதே அங்கு வந்த காதலன் அபினேஷ் ஆட்டோவில் தனது நண்பர்களுடன் வந்து வழிமறித்து தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், மாணவி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் மாணவியை சரமாரியாக தாக்கி நண்பர்கள் உதவியுடன் ஆட்டோவில் கடத்த முயற்சித்துள்ளார். அப்போது மனைவியுடன் வந்த சக மாணவிகள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தால் பொதுமக்கள் அங்கு ஓடி வந்ததை பார்த்து அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

chennai

மேலும் படுகாயம் அடைந்த மனைவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் அபினேஷ் பள்ளி மாணவியை கடத்த முன்றது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அபினேஷ் போலீசார் கைது செய்தனர்.