
சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் கம்பெனிய
சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் புகைப்படம் எடுப்பதற்காக, பிரபல இணையதளமான பிளிப்கார்ட்டில் ஆபர் மூலம் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஆர்டர் செய்துள்ளார்.
இதற்காக 12 மாதங்கள் இ.எம்.ஐ. தவணையையும் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு பிளிப்கார்ட் நிறுவனத்தின் இருந்து பார்சல் வந்தது. டெலிவரி ஊழியர், அந்த பார்சலை வினோத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் எடை குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த வினோத் அந்த சீலிடப்பட்ட பார்சலை உடனடியாக பிரித்து பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அதில், கேமராவுக்கு பதிலாக குழந்தைகள் விளையாடும் பழைய பிளாஸ்டிக் கேமராவும், லென்ஸிற்கு பதிலாக பெயிண்ட் டப்பாவும் இருந்ததால் கடும் அதிர்ச்சியடைந்த வினோத் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களிடம், மோசடி நடந்து வருவதால் பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement