காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவியை கல்லால் அடித்து கொலை.! இளைஞரின் வெறிச்செயல்.!

காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவியை கல்லால் அடித்து கொலை.! இளைஞரின் வெறிச்செயல்.!


young man murdered college girl

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி கூடமலை மேலவீதி பகுதியைச் சேர்ந்த ரோஜா தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

சாமிதுரை கூடமலையில் உள்ள தனது நண்பர்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் போது, ரோஜாவைப் பார்த்து தன்னை காதலிக்குமாறு அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். மேலும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மாணவியின் உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில், ஊர் பெரியவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், நந்தினிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள தகவலை அறிந்த சாமிதுரை, சம்பவத்தன்று ரோஜாவின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் ரோஜாவின் வீட்டிற்கு சென்று  என்னை காதலித்து திருமணம் செய்துகொள், இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரோஜா கூச்சலிட்டதால், கோபமடைந்த சாமிதுரை மாணவி மீது மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார்.

இதனையடுத்து தப்பிக்க முயன்ற ரோஜாவை கீழே தள்ளி ரோஜாவின் மீது கல்லை எடுத்து தலையில் போட்டு, பலமாக தாக்கியுள்ளார். இதில், ரத்தக் காயத்துடன் ரோஜா மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள், உடனடியாக ரோஜாவை அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.