தமிழகம்

பரபரப்பு வீடியோ: பள்ளி சீருடையுடன் இருக்கும் மாணவிக்கு தாலி கட்டும் இளைஞர்.. சிரித்துக்கொண்ட ஏற்றுக்கொள்ளும் மாணவி..

Summary:

இளைஞர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு தாலி கட்டும் வீடியோ ஒன்று இணையத்

இளைஞர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு தாலி கட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோவில் ஒன்றில் இளைஞர் ஒருவர் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு தாலி கட்டுகிறார். அதனை அந்த மாணவியும் சிரித்துக்கொண்டே கட்டிக்கொள்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் வீடியோவை அங்கிருக்கும் ஒருவர் வீடியோவாக எடுத்த நிலையில், தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் இளைஞரின் பெயர் கெளதம் என்றும், அவர் குன்னூரை சேர்ந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளநிலையில், இந்த வீடியோ கடந்த மாதம் எடுக்கப்பட்டது என்றும் கூறப்படும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொலக்கம்பை காவல்நிலைய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement