ஓடும் பேருந்தில் தாலி கட்டிய இளைஞர்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!Young man knock thali to young girl

 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞரை பொதுமக்கள் அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெகன். இவர் அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும்போது இருந்தே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் காதலை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Thali

ஒரு கட்டத்தில், ஓடும் பேருந்தில் அப்பெண்ணின் கழுத்தில் அவர் தாலி கட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்  அலறல் சத்தம் போட்டுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் ஜெகனை பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து ஜெகனை வாணியம்பாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில், வாணியம்பாடி காவல்துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.