30 அடி பள்ளத்தில் மிதந்த இளைஞரின் சடலம்... தகாத உறவால் நிகழ்ந்த கொடூரம்... இருவர் கைது!!Young man death case in Krishnagiri two members arrest

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசஹள்ளி கிராமத்தில் உள்ள தற்போது பயன்பாட்டில் இல்லாத அரசுக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது‌. வெகு நாட்களாக பயன்பாட்டில் இல்லாத அந்த கல்குவாரியில் உள்ள 30 அடி பள்ளத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் முத்துமணி இறந்து சடலமாக கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

young man

அதாவது முத்துராயன் கொட்டாயை சேர்ந்தவர் கருப்பன். இவரது உறவுக்கார பெண் ஒருவருடன், முத்துமணி தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் கோபமான கருப்பன் முத்துமணியை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் முத்துமணி அதனை கண்டு கொள்ளாமல் மீண்டும் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இதனால் கருப்பன் முத்துமணியின் உறவினர்களான சரவணன்,முத்துக்குமார் ஆகியோரது உதவியை நாடியுள்ளார். அதன்படி சம்பவ தினத்தன்று முத்துமணியை கல்குவாரிக்கு அழைத்து சென்று மது குடிக்க வைத்து போதை தலைக்கு ஏறியதும் சரவணன், முத்துக்குமார் மற்றும் கருப்பனுடன் சேர்த்து முத்துமணியை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனையடுத்து போலீசார் சரவணன் மற்றும் முத்துக்குமாரை கைது செய்துள்ளனர். தலைமறைவான கருப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.