ஆன்லைன் கடனால் ஆபாசமாக பகிரப்பட்ட புகைப்படம்.. அவசரத்திற்கு கடன் வாங்கி உயிரைவிட்ட மானஸ்.. மக்களே உஷார்..!

ஆன்லைன் கடனால் ஆபாசமாக பகிரப்பட்ட புகைப்படம்.. அவசரத்திற்கு கடன் வாங்கி உயிரைவிட்ட மானஸ்.. மக்களே உஷார்..!


young-man-committed-suicide

ஆன்லைன் செயலி மூலமாக கடன் வாங்கிய இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. 

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஆன்லைன் கடன் செயலியின் மூலமாக கடன் பெற்றுள்ளார். ஆனால் அவர்களின் நிபந்தனைக்குட்பட்டு கடனை செலுத்த இயலாத நிலையில், அதனால் பாதிக்கப்பட்டவர் ஆன்லைன் கடன் கும்பலால் மிரட்டப்பட்டுள்ளார்.

chennai

மேலும் அந்த கும்பல் அவரின் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பாண்டியனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸப்பில் அனுப்பியுள்ளது. இதனால் மனமுடைந்து போன பாண்டியன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.