ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்.! சிறுமி கொடுத்த பரபரப்பு புகார்.!

ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்.! சிறுமி கொடுத்த பரபரப்பு புகார்.!


young man cheated young girl

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கியபோதும் இதுதொடர்பான குற்றங்கள் குறைந்தபாடில்லை.

இந்தநிலையில், விருத்தாசலம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்ற வாலிபர் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். அப்போது, அவரை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்தகாரம் செய்துள்ளார்.

இதனால் சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். மேலும், இது குறித்து சிறுமி வெற்றிவேலிடம் கூறி திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு வெற்றிவேல் மறுத்துள்ளார். இது குறித்து சிறுமி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வெற்றிவேல் மீது  போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.