முன்விரோத தகராறு.. கணவன் - மனைவிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!Young man attack husband and wife in thiruthani

முன் விரோதம் காரணமாக கணவன் - மனைவியை உருட்டு கட்டையால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருத்தணி அருகே உள்ள மத்தூர் அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகரன். இவரது மனைவி அஸ்வினி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் ரவிச்சந்திரன் அந்த வழியாக வந்துள்ளார்.

Thiruthani

இதில் முன் விரோதம் காரணமாக ரவிச்சந்திரன், அஸ்வினியிடம் வாய் தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அஸ்வினியின் கணவர் சேகரன் எதற்காக என் மனைவியுடன் வீண் தகராறு செய்கிறாய், உடனே இங்கிருந்து சென்று விடு என கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையால் கணவன் - மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தம்பதியினர் இருவரும் காயம் அடைந்துள்ளனர்.

Thiruthani

இதனையடுத்து அஸ்வினி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரவிச்சந்திரன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.