ப்ளீஸ்... எனது அக்காவையும் சேர்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.! திருமணத்திற்கு பிறகு கைதான மாப்பிளை.!

ப்ளீஸ்... எனது அக்காவையும் சேர்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.! திருமணத்திற்கு பிறகு கைதான மாப்பிளை.!



young-man-arrested-for-marrying-sisters

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுகு கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இவருக்கு லலிதா என்ற தங்கை உள்ளார். இந்நிலையில், சுப்ரியா மாற்றுத்திறனாளி என்பதால், அவரை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. 

இந்தநிலையில் சுப்ரியாவின் தங்கை லலிதாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனையடுத்து இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் நடக்க இருந்தது. அப்போது லலிதா, எனது அக்கா மாற்று திறனாளி என்பதால் யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் திருமணம் செய்து கொள்ளுங்கள். மேலும், எனது அக்காவையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டால் தான் உங்களை திருமணம் செய்வேன் என்று உமாபதியிடம் கூறியுள்ளார்.

Sisters

இந்தநிலையில் லலிதா மீது கொண்ட காதலால், இதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி ஒரே மேடையில் சுப்ரியா மற்றும் லலிதாவுக்கும் தாலி கட்டினார். இந்த திருமணம் கர்நாடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த திருமணம் குறித்து ஏராளமான கருத்துகள் வலம் வந்தன.

இந்த நிலையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரி வேகமடுகு கிராமத்திற்கு சென்று, அங்கு சுப்ரியா மற்றும் அவரது தங்கையின் பிறப்பு சான்றிதழை வாங்கி பார்த்தார். அதில் சுப்ரியா தங்கைக்கு 17 வயது தான் ஆவது என்பது தெரிந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்ததாக உமாபதி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் உமாபதியை கைது செய்தனர்.