தமிழகம்

மனைவியின் தங்கையுடன் கள்ளத்தொடர்பு.! ஒரே ஒரு போன் கால்.. பதறிப்போன மனைவி.!

Summary:

மனைவிக்கு தெரியாமல் அவரின் மனைவியின் தங்கையை 2வது திருமணம் செய்து கொண்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவிக்கு தெரியாமல் அவரின் மனைவியின் தங்கையை 2வது திருமணம் செய்து கொண்ட கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை டி.பி சத்திரம் பகுதியில் வசித்து வரும் கணேஷ் - ரம்யா தம்பதியினருக்கு 10 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணேஷுக்கும் அவரது மனைவியின் சகோதரி லோகநாயகிக்கும் காதல் ஏற்பட்டு இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. . 

இந்நிலையில் தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கணேஷ் பலமுறை தனது மனைவி ரம்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக ரம்யா கடந்த ஜூன் மாதம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கணேஷ் தனது மனைவி ரம்யாவை தொடர்புகொண்டு உனது தங்கையை திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டேன் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனையடுத்து தனக்குத் தெரியாமல் தங்கையை இரண்டாவது திருமணமும் செய்துவிட்டதாக ரம்யா மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கணேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Advertisement