திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் நடு வீட்டில் சடலமாக தொங்கிய ஆசிரியை..! பதற வைக்கும் காரணம்..!

திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் நடு வீட்டில் சடலமாக தொங்கிய ஆசிரியை..! பதற வைக்கும் காரணம்..!


young-girl-suicide-for-dowry-problem-near-chennai

திருமணம் முடிந்த 2 மாதத்தில் இளம் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பத்மபிரியா. அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்மப்ரியா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மேலூரை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவருக்கும் பத்மப்ரியாவுக்கும் கடந்த  2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்து ராஜாராமின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பத்மப்ரியாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து பத்மபிரியா ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னுடைய கணவர் மீது வரதட்சனை கொடுமை புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் வரதட்சணை தொடர்பாக எழுந்த தகராறில் ராஜாராமின் குடும்பத்தினர் பத்மபிரியாவை அவருடைய பெற்றோரின் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர். பெற்றோர் வீட்டிற்கு சென்ற பத்மப்ரியா மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

dead

இந்நிலையில் மன அழுத்தம் அதிகமாகி நேற்று தன்னுடைய அறையிலேயே தூக்கு போட்டு பத்மப்ரியா தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பத்மப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும்,  பத்மபிரியா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், எனது தற்கொலைக்கு முழு காரணம் என்னுடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.