திருமணமாகி இரண்டு மாதம் தான் ஆச்சு... வரதட்சணை கொடுமையால் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்.!

திருமணமாகி இரண்டு மாதம் தான் ஆச்சு... வரதட்சணை கொடுமையால் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்.!



Young girl protest for dowry issue

திருமணமான இரண்டு மாதத்திலேயே கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த படப்பை என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவருக்கும் நாவலூர் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது.

chennai

ஜெயஸ்ரீயின் பெற்றோர் திருமணத்தின் போது வரதட்சணையாக 40 சவரன் தங்கம் மற்றும் பணம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்‌. ஆனால் ஜெயஸ்ரீயின் கணவர் வீட்டார் இன்னும் நகை மற்றும் பணத்தை தந்தையின் வீட்டிருந்து வரதட்சணையாக பெற்று வருமாறு தெந்தரவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஜெயஸ்ரீ தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தனது பெற்றோருடன் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.ஐ