தமிழகம்

ஆடை விலகிய நிலையில், காட்டு பகுதியில் சடலமாக கிடந்த இளம் பெண்!! வெளியான அதிரவைக்கும் பின்னணி!!

Summary:

young girl murdered in tirupur

திருப்பூர் ,அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகள் சுகன்யா. இவர் பனியன் நிறுவனம் ஒன்றில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு சுகன்யா தன்னுடன் வேலை பார்த்த இமானுவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வந்துள்ளது. அதனால் சுகன்யா தனது கணவரை விட்டு விலகி தன் இரு குழந்தைகளுடன் அனுப்பர்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

 மேலும் அங்கிருந்து பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற சுகன்யா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர்.

இந்த  நிலையில் தற்போது சுகன்யா ஆடைகள் விலகிய நிலையில், முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சாலையில் காட்டு பகுதியில் கிடந்துள்ளார் அவரின் உடலை போலீசார்  மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர்  இதுகுறித்து பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement