தமிழகம்

இளம் பெண்ணுடன் எம்.எல்.ஏ வுக்கு திருமணம்! தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் தந்தை கூறிய அதிர்ச்சி காரணம்.!

Summary:

எம் எல் ஏ திருமணம் குறித்து பெண்ணின் தந்தை, 20 வயது வித்தியாசம் என்பதால் தான் நான் தற்கொலைக்கு முயன்றேன் என தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வான பிரபு, சௌந்தர்யா என்ற கல்லூரி மாணவியை திடீரென திருமணம் செய்து கொண்டார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் எம்.எல்.ஏ பிரபுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

 தனது மகளை எம்எல்ஏ பிரபு, ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்ததாகவும், இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு எம்எல்ஏ பிரபு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எம்.எல்.ஏ பிரபு வெளியிட்டுள்ள வீடியோவில், நான் சௌவுந்தர்யாவை கடத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வதந்திகள் பரவுகின்றன.

நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். முறைப்படி பெண் கேட்டு சவுந்தர்யாவின் வீட்டுக்கு சென்றோம். ஆனால் அவர்கள் பெண் தர மறுத்ததால், சௌந்தர்யாவின் சம்மதத்துடன் எனது பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் தான் திருமணம் செய்துகொண்டோம் என்று தெரிவித்தார். இந்நிலையில் பெண்ணின் தந்தை பிரபு வீட்டுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தற்கொலைக்கு முயன்ற சுவாமிநாதன் கூறுகையில், என் மகளுக்கும் பிரபுவுக்கும் 20 வயது வித்தியாசம். 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? அதனால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement