வீட்டின் முன்பு முன்னாள் காதலியின் சடலம்..! வீட்டுக்குள் புது மனைவியுடன் சிங்கப்பூர் மாப்பிள்ளை..! கதறிய தாய்..!Young girl commit suicide for love issue near Thanjavur

காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு, சோழகன்காடு கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மகன் புகழரசன். புகழரசன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். அப்போது புகழரசனின் ஊரை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் அருணா என்பவர் சென்னையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கியுள்ளனர். ஒருகட்டத்தில் புகழரசன் வேலை விஷயமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு சென்றும் அருணாவுடன் தொலைபேசி மூலம் பேசி தனது காதலை வளர்த்துள்ளார். இதனிடையே புகழரசனுக்கும், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

காதலனின் திருமணம் குறித்து அறிந்த அருணா இதுகுறித்து புகழரசனின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருவழியாக போலீசார் வந்து சமாதானம் பேசி அருணாவை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

love issue

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த புகழரசன் தான் நிச்சயம் செய்த பெண்ணுடன் திருமண செய்து, அந்த புகைப்படத்தை அருணாவின் தொலைபேசிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அருணா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அருணாவின் உடலுடன் புகழரசன் வீட்டிற்கு வந்த அருணாவின் உறவினர்கள் புகழரசன் வீட்டை அடித்து நொறுக்கியதோடு அவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருணாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு புகழரசன், சாந்தி இருவரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துசென்றுள்ளனர்.

மேலும், அங்கு கலவரம் ஏதும் ஏற்பாடாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நல்லா வாழ வேண்டிய பெண்ணை காதல் என்கிற பேரில் ஏமாத்திவிட்டு, இந்த வீட்டிற்கு மருமகளாக வரவேண்டிய என் மகளை பிணமாக வரவைத்துவிடீர்களே என கூறி அழுதது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.